CAA-க்கு எதிராக கையெழுத்து இயக்கம்-திமுக

சென்னை, ஜனவரி-24

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தற்போதைய அரசியல் நிலவரம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *