ரஜினி நல்ல பண்பாளர், பெரியார் மீது மதிப்பு கொண்டவர், பெரியார் படம் வெளிவர காரணமே ரஜினி தான்- ராகவா லாரன்ஸ்

சென்னை, ஜனவரி-24

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் ரஜினியின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையானது. ரஜினியின் கருத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். ரஜினிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் ஆதரவாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப் பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும். ரஜினிகாந்த் அவர்களை பொறுத்தவரை, யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. ஏன் அவரை திட்டுபவர்களை கூட பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்.

எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாகப் பேசக்கூடியவர் அல்ல. ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டதாக கூறுகின்றனர். அப்படி பேச கூடியவர் என்றால் 2006 -ம் ஆண்டு பெரியாரின் தீவிர தொண்டரான இயக்குநர் வேலு பிரபாகரன் அவர்கள், “பெரியார் கருத்துக்களைத் தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது, எதிர்பாராத பெரும் தொகையைக் கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்? பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் தான் ரஜினி சார்.

எனவே அவரை யாரும் தவறாகப் புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *