ரஜினி மகளின் மறுமணத்திற்கு பெரியார் தான் காரணம் – அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை, ஜனவரி-23

பெண்கள் ஊராட்சி தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு: பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார்.

ராஜீவ்காந்தியை கிராமத்தில் இருப்பவர்கள் மறக்க கூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர் ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது.

மேலும், ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியாரின் கொள்கைகள் தான் அதற்கு காரணம் என்பதை ரஜினி மறக்க கூடாது. பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். ரஜினி மீது எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *