சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை: அசாமை சேர்ந்த மஜம் அலி என்பவன் கைது

ஜனவரி-23

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அசாமை சேர்ந்த மஜம் அலி என்பவன் செய்யப்பட்டுள்ளான்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளியின் 8 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தப்பட்டது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரிடம் 3 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், மஜம் அலி என்ற இளைஞனை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து கைதான நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *