சட்டப்பிரிவு 370 ரத்தை திரும்ப பெறமுடியாது-மத்திய அரசு உறுதி

டெல்லி, ஜனவரி-23

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலம், இந்தியாவுடன் இணைந்துள்ளது. இந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, மத்திய அரசு நீக்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்குகளை நீதிபதிகள் என்வி ரமணா, எஸ்.கே. கவுல், ஆர்.சுபாஷ்ரெட்டி, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜராஜ வழக்கறிஞர் வேணுகோபால், காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைந்தது என்பதை விளக்கியதுடன், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது திரும்ப பெற முடியாது. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகி உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *