அசாமில் தடை செய்யப்பட்ட 8 அமைப்புகளை சேர்ந்த 644 தீவிரவாதிகள் சரண்

கவுகாத்தி, ஜனவரி-23

அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட 8 பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 644 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.

அண்டை நாடுகளான சீனா, மியான்மர், வங்கதேசம் ஆகியவை முகாம்கள் அமைத்து இந்தியாவுக்குள் பல்வேறு சட்டவிரோத செயல்படுகளில் இந்த இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மத்திய அரசு பல அமைப்புகளை தடை செய்துள்ளன.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட 8 அமைப்புகளின் 644 தீவிரவாதிகள் தற்போது சரணடைந்துள்ளனர். உல்ஃபா, என்.டி.எஃப்.பி, ஆர்.என்.எல்.எஃப், கே.எல்.ஓ, சிபிஐ (மாவோயிஸ்ட்) என்.எஸ்.எல். ஏ. ஏபிஎஃப். என்.எல்.எஃப்.பி ஆகியவற்றை சேர்ந்த தீவிரவாதிகள் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரணடைந்துள்ளனர்.

ஏகே-47 ரக துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அசாமில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் சரணடைந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *