ராஜஸ்தானில் மகனுக்கு ”காங்கிரஸ்” என்று பெயர் சூட்டிய தந்தை!!!

உதய்ப்பூர், ஜனவரி-23

ராஜஸ்தான் மாநிலத்தில் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் ஜெயின் அம்மாநிலத்தின் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டரான இவர் தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளார். இவரது குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டது என்றும், இந்த குழந்தையும் 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படும் என்றும் வினோத் ஜெயின் தெரிவித்துள்ளார். வினோத் ஜெயினுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பின்னர் வினோத் ஜெயினுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *