நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் – சீமான் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

சென்னை, செப்-22

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ் நகர் தவிர, மேலும் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 61 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி இந்த 64 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாம்தமிழர் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. மேலும் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறது. தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *