நிர்பயா வழக்கு: தண்டனை வழங்கிய நீதிபதி சதீஷ்குமார் அரோரா இடமாற்றம்

டெல்லி, ஜனவரி-23

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்ற கூடுதல் நீதிபதி சதிஷ்குமார் அரோரா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் பிப்.1-ம் தேதி குற்றவாளிகள் 4 பேரையும் காலை 6 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிர்பயா வழக்கில் நீதிபதி சதிஷ்குமார் அரோரா தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனை வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி அரோராவுக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி அரோரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஓராண்டிற்கு உச்சநீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அடிப்படையில் சதீஷ்குமார் அரோரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *