பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா சந்திப்பு!!!

டெல்லி, ஜனவரி-23

பா.ஜ.க. தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.பி.நட்டா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைவராக இருந்த அமித்ஷா மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதால், ஜெ.பி.நட்டா செயல்தலைவராக இருந்து வந்தார்.

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெ.பி.நட்டா பா.ஜ.க. தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். பா.ஜ.க.வின் 14-வது தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்வானார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெ.பி.நட்டா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். மோடியுடனான சந்திப்பு குறித்து ஜெ.பி.நட்டா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன். மோடியின் திறமைமிகு தலைமையால் இந்தியா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று, மோடியின் வழிகாட்டுதலின்படி பாரதிய ஜனதா கட்சியையும், கட்சியின் கொள்கைகளையும் நாடெங்கும் கொண்டு செல்வேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *