நீட் தேர்வு 2020- தமிழகத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% சரிவு

சென்னை, ஜனவரி-23

2020-ம் ஆண்டில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% சரிவடைந்துள்ளது. 

2018 – 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில், தமிழகத்தில் 17% பேர் குறைவாகவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் என்று எடுத்துக் கொண்டால், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 74,000 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல முறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதும், கட்-ஆப் அதிகமாக இருப்பதும், ஆள்மாறாட்ட சம்பவங்களால் சில மாணவ, மாணவிகள் அதிருப்தியில் இருப்பதாலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *