டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை!!!

டெல்லி, ஜனவரி-23

69-வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

வருகிற ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின் போது, இந்தியா கேட் பகுதியில் உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஒத்திகை கடந்த 13-ம் தேதி தொடங்கி தினமும் காலையில் நடைபெற்று வருகிறது.

இதில், முப்படைகளின் வீரர்கள், துணை ராணுவப் படையினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோர் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். டெல்லியில் தற்போது கடும் பனிப் பொழிவு நிலவி வரும் நிலையில், கொட்டும் பனியிலும், முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *