ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!!!

மதுரை, ஜனவரி-23

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச்.ராஜா மீது இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நீதிமன்றத்தின் தடையை மீறி பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச்.ராஜா விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடத்த முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசினார்.

ஆனால் தனது பேச்சு எடிட் செய்யப்பட்டிருப்பதாக ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். இதையடுத்து ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா மீது இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருமயம் காவல் ஆய்வாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *