முடிந்தால் திமுக தலைவராகி காட்டுங்கள்-துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

சென்னை, ஜனவரி-23

சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு நேதாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: திமுகவில் மகன், மகனுக்கு பின்னர் பேரன் என வாரிசுகள் மட்டுமே தலைவர் மற்றும் உயர் பதவிகளை ஏற்க முடியும். ஆனால், அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில் வர முடியும் என்றார்.

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே உதாரணம் என்றும், துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார். அதிமுக என்றைக்கும் ஹீரோதான் எனவும் 2021ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *