தஞ்சை பெரியக்கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும்-ராமதாஸ்

சென்னை, ஜனவரி-23

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெரிய கோயில் என அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு வரும் பிப்.5-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் எனவும், சமஸ்கிருத மொழியில் நடத்தக்கூடாது எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், இதே கோரிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. ஆகம விதிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிராக இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!

சிவபெருமான் தமிழ்நாட்டில்தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அனைத்து நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்?” என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *