கடைசி ஆசையை கூறாமல் மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள்

டெல்லி, ஜனவரி-23

பிப்.1ம் தேதி தூக்கு தண்டனை பெற உள்ள 4 நிர்பயா குற்றவாளிகளும் தங்களது கடைசி விருப்பத்தை தெரிக்காமல் மவுனம் காத்து வருவதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நிர்பயா குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் சிங், பவன் குப்தா ஆகியோரின் சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் என அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதனால் ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி பிப்.1 ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறை நிர்வாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், தங்களுடைய கடைசி விருப்பத்தை தெரிவிக்காமல் குற்றவாளிகள் மவுனம் காத்து வருவதாக சிறை நிர்வாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தங்களின் தூக்கு தண்டனை மேலும் தள்ளிப் போகலாம் என அவர்கள் நம்புவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த 14 நாட்களுக்கு பிறகு தூக்கிலிட வேண்டும் என விதி உள்ளதால், இதுவும் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாக குற்றவாளிகள் கருதுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *