நிர்பயா குற்றவாளிகளுடன் வக்கீல் இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள்: கங்கணா ஆவேசம்

டெல்லி, ஜனவரி-23

நிர்பயா குற்றவாளிகளுடன் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள் என நடிகை கங்கணா ரனாவத் ஆவேசமாக பேசி உள்ளார்.

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 பேரையும் பிப்.1 ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடும் பணியை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் மனித உரிமைகள் அமைப்பின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகளை சோனியா மன்னித்ததை போன்று, அவரை முன்னுதாரணமாக கொண்டு நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் இந்த கருத்துக்கு நிர்பயாவின் தாய் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கணா, நிர்பயா குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அவர்களுடன் சேர்த்து இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள். இவரை போன்ற பெண்களால் தான் அரக்கர்களும் கொலைகாரர்களும் உருவாக்கப்படுகிறார்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *