டெல்லி சட்டமன்ற தேர்தல்: மோடி, அமித் ஷா உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கிய பா.ஜ.க.

டெல்லி, ஜனவரி-22

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை எதிர்கொள்வதற்காக பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி, அங்கு 40 நட்சத்திர பேச்சாளர்கள் பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இங்கு கடந்த 2015-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பாஜக மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்தநிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை எதிர்கொள்வதற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நரேந்திர மோடி, அமித் ஷா, ஸ்மிருதி இராணி, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், ஹர்ஷ வர்தன், விஜய் கோயல், கட்சியின் புதிய தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோன்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங்சவுகான், அர்ஜுன் முண்டா ஆகியோரும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *