ரஜினி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை, ஜனவரி-22

பெரியாா் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகா் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நடிகா் ரஜினிகாந்த் திராவிட கொள்கைகளுக்கு எதிராக பொய்யான தகவல்களை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார். இது குறித்த புகாரில் கோவை காட்டூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஜினி மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திராவிட விடுதலைக் கழகம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *