பயப்படவேண்டாம், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மேற்கு வங்கத்தில் அமலாகாது-மம்தா

டார்ஜ்லிங், ஜனவரி-22

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் டார்ஜிலிங் பகுதியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக மம்தா பானர்ஜி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவ்வப்போது, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.ஐ எதிர்த்து பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.ஐ எதிர்த்து டார்ஜ்லிங் பகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் மீண்டும் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

பேரணியின் முடிவில் பேசிய மம்தா பானர்ஜி: மேற்கு வங்க மக்கள் எதற்காகவும் பயப்படதேவையில்லை என்றும், என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. வை ஒருபோதும் மேற்கு வங்கத்தில் அமபடுத்தப்போவதில்லை என உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நான் இருக்கும்வரை யாரும் உங்களை எளிதில் தொடமுடியாது, இது நம்முடைய நிலம், இதை பிரிக்க விடமாட்டேன் என சூளுரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *