அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்: படத்தின் பெயர் ”நாரப்பா”, சிவசாமியாக களமிறங்குகிறார் வெங்கடேஷ்

சென்னை, ஜனவரி-22

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அந்த படத்திற்கு நாரப்பா என்று பெயர் வைத்துள்ளனர். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கும் நாரப்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சிவசாமி வேடத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது சிவசாமி தனுஷை பார்த்தது போன்றே உள்ளது.

வெங்கடேஷ் வெளியிட்ட நாரப்பா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அசந்துபோய், அருமை, படத்தை பார்க்க காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ் ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனால் அனைவரும் சிவசாமி ஆகிவிட முடியாது. படத்தை பார்த்து ரீமேக் செய்யுங்கள், கெடுத்து விட வேண்டாம். உடை, கெட்டப்பை அப்படியேவா காப்பியடிப்பது என்று தமிழ் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *