பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் தோள்களில் சுமந்து சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்!!!

பிஜாப்பூர், ஜனவரி-22

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை தேடிச்சென்ற இடத்தில், பிரசவ வலியால் துடித்த பழங்குடி கர்ப்பிணி பெண்ணை சிஆர்பிஎஃப் வீரர்கள் காட்டு வழியாக 6 கிலோ மீட்டர் தொலைவு மருத்துவமனைக்கு சுமந்துசென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக கருதக்கூடிய பிரச்சினைக்குரிய இடங்களில் சிஆர்பிஎஃப் படைவீரர்கள் தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அப்போது, பதேடா கிராமத்தில் பள்ளி மாணவன் ஒருவன் பழங்குடியின பெண் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருப்பதாக பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து படைத்தளபதி தனது குழுவுடன் மாணவனை பின்தொடர்ந்து காயதப்பரா பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளால் சூழப்பட்ட கிராமத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்பதால், ஒரு நீண்ட மூங்கில் கட்டிலை கட்டி பாதுகாப்பு பணியாளர்கள் ஒரு தற்காலிக ஸ்ட்ரெச்சரை உருவாக்கியுள்ளார்.

அவர்கள் அந்த பெண்ணை மூங்கில் கட்டிலில் வைத்து 6 கி.மீ தூரம் தோள்களில் சுமந்து சென்றுள்ளனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்தப் பெண் சரியான நேரத்தில் பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிரசவ வலியால் துடித்த பழங்குடியின பெண்ணை தோள்களில் சுமந்து சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *