2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தவேண்டும்-ராமதாஸ்

சென்னை, ஜனவரி-22

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்தவேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான குரல் சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தில் இருந்து எழ வேண்டும்!

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று அகிலேஷ்சிங் யாதவ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பா.ம.க.வின் கோரிக்கை மிகச்சரியானது; அதற்கு ஆதரவு பெருகுகிறது என்பதையே இது காட்டுகிறது!!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *