இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!!!

ஜனவரி-22

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய வருகையின் போது பிரதமர் மோடியுடன் பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியா வர திட்டமிட்டுள்ளார். அவரது வருகை 2 நாட்கள் சுற்றுப்பயணம் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு சமீபத்தில் இந்தியா வந்து ஆலோசனை நடத்தியது. அதில் டிரம்ப் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில் குறிப்பாக 24, 25-ந் தேதிகளில் டிரம்ப் இந்தியா வர வாய்ப்புள்ளது. இந்தியா வருகையின் போது பிரதமர் மோடியுடன் பல்வேறு முக்கிய பேச்சு வார்த்தைகளை டிரம்ப் நடத்த உள்ளார். டிரம்ப்-மோடி சந்திப்பை டெல்லி அல்லது மேற்கு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது ஹீஸ்டன் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் டிரம்ப்புடன் சென்று கலந்துகொண்டார். அதேபோன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதுதவிர இந்தியா- அமெரிக்கா இடையே ராணுவ துறையில் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *