43-வது சென்னை புத்தக காட்சி: ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை!!!

சென்னை, ஜனவரி-21

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்திய 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. சென்னை நந்தனத்தில் ஜனவரி 09-ம் தேதி தொடங்கிய புத்தக காட்சி ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர்.

ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தக கண்காட்சியில் 750 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. தமிழக முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து ஏராளமான வாசகர்கள் வருடந்தோறும் வருகை தந்தனர். பிரபலங்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என ஏராளமானோர் தினந்தோறும் சென்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு மற்றும் அறிவியல் புத்தகங்கள் அதிகளவில் இந்த புத்தக காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என்றும், இந்தாண்டு ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் பபாசி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *