சிவசேனாவுடன்தான் கூட்டணி; மகாராஷ்டிரா முதல்வராக மீண்டும் பதவியேற்பேன் – தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்பேன் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை, செப்-22

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதற்காக தேசியவாத காங்கிரஸுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயத்தில், மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இருந்த போதிலும் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் கூட்டணி அமைவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் சிவ சேனாவுடன் கூட்டணி அமைத்து தான் பாஜக போட்டியிடும். எனவே இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அது இறுதி செய்யப்படும். ஜனநாயகத்தில், மக்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்கிறார்கள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் 2-வது முறையாக நான் முதல் மந்திரியாக வருவேன். இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பாஜக – சிவசேனா கூட்டணி இரண்டு நாளில் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *