உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள், பேசுங்கள்-ரஜினிக்கு நடிகை குஷ்பு ஆதரவு

சென்னை, ஜனவரி-21

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்தின் பெரியார் குறித்த கருத்தும், அதைத் தொடர்ந்து அவரது பேட்டியும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது

இதுகுறித்து இன்று விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த், அவுட் லுக் இதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, இல்லாத விசயத்தையோ அல்லது கற்பனையாகவோ நான் எதையும் கூறவில்லை. பத்திரிகையில் வந்ததை தான் கூறினேன். எனவே நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு நடிகை குஷ்பு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், சரியோ அல்லது தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள். எல்லோருக்கும் ஏதாவது கருத்து இருக்கும், நீங்கள் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது, என்று குஷ்பூ தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *