ரஜினி சிக்கிக்கொண்டார், யாரை திருப்திபடுத்த இப்படி பேசுகிறார்-வீரமணி

நெல்லை, ஜனவரி-21

பெரியார் குறித்து தவறான தகவலைச் சொல்லிவிட்டு அதற்கு வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் உண்மைக்கு மாறான செய்தியை, ஆதாரம் இல்லாத செய்தியை ரஜினி கூறுகிறார், இதற்கு நிச்சயம் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி பதில் சொல்லவேண்டியிருக்கும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்த்தித்த திராவிட கழக தலைவர் வீரமணி பேசியதாவது:

பெரியார் குறித்து தவறான தகவலை சொல்லிவிட்டு அதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல் தங்கள் தவறை திருத்தி கொள்ளாமல் மீண்டும் 2017ல் வந்த ஏதோ பத்திரிக்கை ஆதாரத்தை வைத்துதான் பேசுகிறேன் என்று சொல்வது பொறுப்பான பதில் ஆகாது. உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்வதால் அது உண்மையாகி விடாது.

நிச்சயமாக அதற்கு ஆதாரம் இல்லை என்ற பதிலை அவர்கள் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியிருக்கும். ஒரு தவறை சுட்டிக்காட்டும் போது மன்னிப்பு கேட்பது மனிதப்பண்பு. ஆனால், வருத்தம் தெரிவிப்பதும் மன்னிப்பு கோருவது அவர்கள் உரிமையைப் பொறுத்தது.

கருத்துக்களை மாற்றிக்கொள்ளவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். அவருடைய பண்பாடு யாரை திருப்தி செய்வதற்காக? எந்த இலக்கை நோக்கி அவர் போய்க் கொண்டிருக்கிறார்? யாரிடமோ அகப்பட்டு சிக்கி கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக காட்டுகிறது. இதற்குரிய வெளிச்சம் விரைவில் நீதிமன்றம் மூலம் கிடைக்கும் அதனுடைய பலன் மக்களுக்கு தெளிவாக தெரியும். இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *