டெல்லி சட்டமன்ற தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்

டெல்லி, ஜனவரி-21

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளாருமான அரவிந்த் கெஜரிவால், டெல்லி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

70 உறுப்பினா்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜனவரி 21-ம் தேதி (இன்று) கடைசி நாளாகும்.

இந்நிலையில், டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜரிவால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவிருந்தார். ஆனால், டெல்லி சட்டமன்ற தொகுதியில் சாலை மார்க்கமாக மக்களை சந்தித்து பேசியதால் தாமதம் ஏற்பட்டது. வேட்புமனுத் தாக்கலை இன்றைய (ஜனவரி 21) தினத்திற்கு ஒத்திவைத்தார். 

இதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது பெற்றோர்களும் வந்திருந்தனர். ஜாம் நகர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

ஏற்கனவே, கெஜ்ரிவால் இரண்டு முறை டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *