பெண் பத்திரிகையாளரை ”அடி போடி” என திட்டிய நிர்மலா சீதாராமன் – வைரலான வீடியோ

பெண் நிருபரை பார்த்து “அடி போடி” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, செப்-21

கோவா மாநிலத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் இந்த சந்திப்பின் போது பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலளிக்காமல் அவரைப் பார்த்து , ”அடி போடி” என சலித்துக்கொண்டார். இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு மத்திய அமைச்சர் பொது இடத்தில் இவ்வாறு பேசுவது சரியா என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் நிதி அமைச்சர் செல்லமாக கோபித்துக் கொண்டு சொன்ன வார்த்தைகள் இது. எனவே இதை பெரிது படுத்த தேவையில்லை என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *