அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு கார் பரிசு: ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வழங்கினர்

சென்னை, ஜனவரி-20

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் காரை பரிசாக வழங்கினர்.

உலக பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி கடந்த 17-ம் தேதி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மேலும், 500-க்கும் மேற்பட்ட காளையர்கள் களமாடின. போட்டியின் நிறைவில் 16 காளைகளை அடக்கி ரஞ்சித் என்ற இளைஞர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த காளை என்ற இடத்தை மாரநாடு குலமங்கலத்தைச் சேர்ந்த காளை பிடித்தது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசளிக்கப்படும் என முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அறிவித்திருந்தனர். மேலும், மாடுபிடி வீரருக்கு 4 கறவை மாடுகளும் பரிசாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாடுபிடி வீரரான ரஞ்சித்தை சென்னை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காரை பரிசாக வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *