15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செப்-21
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வளி மண்டலத்தில் நிலவிவரும் சுழற்சியானது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள வடக்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.