MGR சிலைக்கு EPS , OPS மாலை மரியாதை

சென்னை, ஜனவரி-17

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கைகளால் இனிப்புகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *