நாங்குநேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் தி.மு.க. போட்டி – மு.க.ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-21

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரியுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவித்தார். அதேபோல புதுவை காமராஜர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் எனக் கூறினார். இதனை தொடர்ந்து, விக்கரவாண்டியில் திமுக வேட்பாளர் யார் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்தார். விக்கரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் விருப்ப மனு விநியோகம் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வேட்பாளர் நேர்காணல் அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *