”புகையில்லா போகி, புதுவாழ்வு பொங்கல்”-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விழிப்புணர்வு பொங்கல் வாழ்த்து

சென்னை, ஜனவரி-14

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. மார்கழி மாதம் கடைசி தேதி போகி பண்டிகையாகும். அதற்கும் மறுநாளான தை திருநாளில் பழையன கழிந்து புதியன புகுதல் என்பதற்கிணங்க போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

பழைய பொருட்களை எரிப்பதால் காற்றுமாசு ஏற்படுகிறது. இந்த நிலையில், புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுங்கள் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

போகி மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நெகிழியில் ஆன பொருட்கள், டயர்கள், பாய்கள், துணி போன்றவற்றை தீயிலிடுவதை தவிர்ப்போம். இறைவன் நமக்களித்த இனியமையாத காற்று மாசுபடுவதை தவிர்ப்போம் என தெரிவித்துள்ளார். பொங்கலை ஆரோக்கியமாக கொண்டாடுவோம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சரின் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *