விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்ல் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை, செப்-21

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. இதேபோல, விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளையும் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதன்படி, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செப் 23ம் தேதி தொடங்கி செப்.30ம் முடிவடையும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 1ம் தேதியன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறவுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதியன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இடைத்தேர்தலுக்கான பணிகளை கட்சிகளும் துவங்கியுள்ளன. அந்த வகையில், இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21-10-2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் 22-9-2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும், 23-9-2019 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அப்படிவங்களை 23-9-2019 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *