இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால் திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்-21

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அக்டோபர் 6ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *