பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஜனவரி.21 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஜனவரி-13

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான தேதி ஜன.21 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ இனிப்பு, கரும்பு உள்ளிட்ட பரிசுத்தொகை ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகை வழங்கும் திட்டம், ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இதுவரை 95 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசை பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜன.13) முடிவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கான காலக்கெடுவை ஜன.21 வரை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *