கோவையில் உணவு திருவிழா: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை, ஜனவரி-11

கோவையில் மண் மனம் மிக்க உணவு வகைகளுடன் இன்று துவங்கிய உணவு திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஸ்டால்களை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உணவு திருவிழா நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

கோவை விழாவின் ஒரு பகுதியாக மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் உணவு திருவிழா இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை கொடிசியா சாலை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கோவையை சேர்ந்த உணவகங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. அனைத்து வகையான உணவுகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் 140 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவு திருவிழாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து, அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து உணவு திருவிழா நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த உணவு திருவிழாவில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக இசைக்கச்சேரி, சிலம்பாட்டம், ஜமாப்,பொய்கால் குதிரை,மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் ருசியான உணவுடன், பொழுதை கழிக்க ரம்யமான சூழல் அமைந்திருப்பதாக பெருமையுடன் கூறிச்செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *