தர்பாரில் சசிகலா குறித்த வசனத்தை நீக்க தயார்-லைகா நிறுவனம்

சென்னை, ஜனவரி-10

தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக குறிக்கும் வசனத்தை நீக்க தயார் என லைகா நிறுபனம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று வெளியானது தர்பார் திரைப்படம். இந்த படத்தில் ரஜினி சிறைச்சாலையை பார்வையிடச் சென்ற போது, அங்குள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை பார்த்து ஆச்சரியப்பட்டு சக போலீசிடம் கேட்பார். அதற்கு, அந்த சக போலீஸ் காசு இருந்தா ஜெயிலேயே ஷாப்பிங் போகலாம் என்று கூறும் வசனம் இடம்பெற்றிருந்தது. இந்த வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. வசனத்தை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என சசிகலாவின் வழக்கறிஞரும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தர்பார் திரைப்படத்தில் சசிகலாவை மறைமுகமாக குறிக்கும் வசனங்களை நீக்க தயாராக இருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. தனி நபரை குறிப்பதற்காகவோ, புண்படுத்துவதற்காகவோ வசனம் எழுதப்படவில்லை. குறிப்பிட்ட சில நபரை புண்படுத்தும் வகையில் வசனம் இருந்தால் அது கண்டிப்பாக நீக்கப்படும். என தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *