அனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட் – ஸ்டாலின் ஆவேசம்

‘ஆள்மாறாட்ட’ உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் NEET கொடூரம் தொடர அனுமதிக்கலாமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, செப்-19

நீட் தேர்வு மூலம் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூரியா என்ற மாணவர் படித்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விசாரணையில் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைக்கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது ;-

+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?

மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *