சிறப்பு எஸ்.ஐ. வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஜனவரி-10

சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வில்சன் குடும்பத்தினருக்கு தம்முடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து அவருடைய குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று தாம் அறிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வில்சனின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டு, அவருடைய குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *