சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு ஸ்டாலின் நன்றி!!!

சென்னை, ஜனவரி-10

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த துணைராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதுவரை தனக்கு பாதுகாப்பு அளித்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த பல ஆண்டுகளாக எனக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கிய ஒவ்வொரு சிஆர்பிஎப் வீரருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுபவர்களிடம் இருந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களை பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *