வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்யவேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

டெல்லி,  ஜனவரி-10

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. எனினும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஒரே ஊராட்சி மன்றத்தில் 2 பேர் வெற்றி தலைவர்களாக வெற்றி பெற்றதாக சான்று வழங்கப்பட்டது.

இது போல பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் அமர்வு முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒரு முறையீட்டை செய்தனர். அந்த முறையீட்டில் ‘தங்கள் தரப்பு வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருந்தனர். ஆனால் முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் முறைகேடுகள் செய்து எதிர்தரப்பு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் பதவியேற்புக்கு தடை விதிக்க வேண்டும். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்’ என 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞகர்கள் முறையீடு செய்தனர்.

இதை கேட்ட நீதிபதிகள் நீதிபதிகள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள வீடியோ பதிவுகளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *