ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு: கோவையில் அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்

கோவை, ஜனவரி-10

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கரும்பு, பச்சரிசி, முந்திரி, ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு ஜனவரி.09-ம் தேதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் RS புரம் லாலிரோடு சிந்தாமணி கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ. 1000 உடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார். ஏராளமான மக்கள் பொஙகல் பரிசு தொகுப்பை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வி, துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *