திமுக உறுப்பினர் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!!

சென்னை, ஜனவரி-09

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 11,140 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு, திமுக ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், ஆனால், தற்போது அதன் செயல்பாடுகள் குறைந்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பற்றியும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 8 ஆண்டுகளில் 11,140 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. கூடுதல் நிதி கிடைக்கும் பட்சத்தில் மேல்நிலை தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *