சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அதிமுக அரணாக இருக்கும்-முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, ஜனவரி-09

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கடந்த 6ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கினார். முதலமைச்சர் நிகழ்த்திய உரையின் குறிப்புகள் சிலவற்றை பின்வருமாறு….

 • ரூ. 407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 • அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
 • பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் புத்துயிர் பெற்று வருகின்றன.
 • ரூ. 407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 • கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை உள்ளது.
 • இதுவரை ரூ. 2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. நீண்ட காலமாக தூர்வாரப்படாத ஏரிகள் மற்றும் குளங்கள் ரூ.2,182 கோடி செலவில் தூர்வாரப்படும்.  
 • தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
 • சிறுபான்மையினரின் பாதுகாப்பில் அதிமுக அரசு அரணாக இருக்கும். CAA, NRC-யால் சிறுபான்மையினர் சிறிதளவும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
 • தமிழக, கேரளா இடையேயான நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். காவிரி – கோதாவரி திட்டத்தை இந்தாண்டே செயல்படுத்த பிரதமரிடம் வலியுறுத்துவோம்.
 • இங்கிலாந்தின் புகழ்பெற்ற மருத்துவமனையான கிங்ஸ் விரைவில் தமிழ்நாட்டில் அமையும்.
 • தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இணையம் ரூ.1,815 கோடியில் செயல்படுத்தப்படும்.
 • பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
 • தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 838 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
 • குற்றங்களை தடுக்க தமிழகம் முழுவதும் 4.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.50 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
 • தமிழகத்தில் 12 அரசுக் கல்லூரிகள், 5 பாலிடெக்னீக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளனர்.
 • இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதி பெற்றுள்ளது.
 • 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெறும்.
 • வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தப்படும்.
 • தமிழகத்தில் புதிதாக 227 நீதிமன்றங்களை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க 16 போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 • தமிழகத்தில் தகுதியுள்ள முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். 5 லட்சம் முதியவர்களுக்கு மாதந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *