மறைமுக தேர்தல்: வீடியோ பதிவு செய்யப்படும்-தேர்தல் ஆணையம்

மதுரை, ஜனவரி-09

தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் ஜன.,2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜன.,11 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை வீடியோ பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்திருந்தது. இதே போன்று திண்டுக்கல்லை சேர்ந்த லலிதா என்பவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது பதிலளிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று பதிலளித்த தமிழக தேர்தல் ஆணையம்:  தமிழகம் முழுவதும் நடைபெறும் மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. இதனை ஏற்ற நீதிமன்றம் வீடியோ பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஜன.,21 ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *