நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!!!

டெல்லி, ஜனவரி-09

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22-ந்தேதி தூக்கில் போட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள 3-ம் எண் அறை பகுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி திகார் ஜெயிலில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில்,     தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  குற்றவாளி வினய் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *