பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான ஊராட்சிமன்ற தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை, ஜனவரி-09

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்குரிய ஊராட்சிமன்ற தனி அதிகாரிகளின் பதவிகாலத்தை நீட்டிக்கும் மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்தில் புதிதாக பிரிக்கபப்ட்டுள்ள 9 மாவட்டங்கள் மற்றும் சென்னையை தவிர்த்து 27 மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாததால், அங்குள்ள உள்ளாட்சி பணிகள் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வகை செய்யும் ஊராட்சி மன்ற தனி அதிகாரிகளின் பதவிகாலத்தை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *